திங்களன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைநகர் டெல்லியின் எல்லைகள் அடுத்த ஒருவாரத்திற்கு மூடப்படுவதாக அறிவித்தார். அத்தியாவசிய தேவைகளுக்காக வரும் வாகனங்கள் மட்டும் டெல்லிக்குள் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
'டெல்லி அரசுடன் கலந்தாலோசித்து எல்லை திறப்பது குறித்த முடிவு எடுக்கப்படும்' - மனோகர் லால் கட்டார்
சண்டிகர்: தலைநகர் டெல்லியுடனான எல்லையை திறந்துவிடுவது குறித்த முடிவுகள் அம்மாநில அரசுடன் கலந்தாலோசித்த பின்னர் அறிவிக்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இன்று இது குறித்துப் பேசிய ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், "மத்திய அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படுகின்றன. தலைநகர் டெல்லியுடனான எல்லை திறக்கப்படுவது குறித்து அம்மாநில அரசுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில், மாநிலங்களுக்குள்ளான பயணங்களுக்கு எந்தத் தடையும் இல்லையென்றும் அதற்கென அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லையென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.