தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லைப் பதற்றத்துக்கு சீனாவே பொறுப்பு - வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றச்சாட்டு

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்பும் நிலையில், எல்லையில் தொடர் அத்துமீறலை சீனா மேற்கொண்டு வருவதாக வெளிறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

MEA
MEA

By

Published : Sep 3, 2020, 8:54 PM IST

இந்தியாவின் லடாக்கில் உள்ள பாங்காங்க் ஏரியின் தெற்கு கரைப் பகுதியில், சீனப் படையினர் அண்மையில் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இதை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்ததாகவும் ராணுவம் தனது அறிக்கையில் கூறியிருந்தது.

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”லடாக் பகுதியில் சீனாவின் செயல்பாடுகளை நான்கு மாதங்களாக இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. எந்தவொரு சிக்கலையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா உறுதி கொண்டுள்ளது.

அமைதியை நிலைநாட்ட சீனா ஒத்துழைப்பு தரவேண்டும் என இந்தியா சார்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில்தான் சீனத் தரப்பு மீண்டும் அத்துமீறலை மேற்கொண்டுள்ளது. எனவே, புதிய பதற்றத்துக்கு சீனாவே பொறுப்பு' எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி தரும் விதமாக மத்திய அரசு, சீனாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட செயலிகளைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்தியா- சீன எல்லையில் பதற்றம் - குவிக்கப்படும் வீரர்கள்

ABOUT THE AUTHOR

...view details