தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இதில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சர்கள், செயலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஆசியன் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு!
பாங்காக்: தாய்லாந்தில் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நடந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
Bombs rattle Bangkok during ASEAN summit, wounding two
இந்நிலையில், இன்று காலை தலைநகர் பாங்காக்கில் இரண்டு வெவ்வேறு இடங்களில் சிறிய அளவிலான குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
மைக் பாம்பியோ, ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தாய்லாந்தில் இருக்கும் நிலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இது குறித்து தாய்லாந்து செய்தித் தொடர்பாளர், இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Last Updated : Aug 2, 2019, 6:31 PM IST