தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 7, 2020, 10:36 PM IST

Updated : Dec 7, 2020, 10:45 PM IST

ETV Bharat / bharat

மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுஷில் குமார் மோடி

பாஜக மூத்த தலைவரும், பிகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சருமான சுஷில் குமார் மோடி, மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சுஷில் குமார் மோடி
சுஷில் குமார் மோடி

பாட்னா (பிகார்): பிகார் மாநில லோக் ஜனசக்தி கட்சி நிறுவனர் ராம் விலாஸ் பஸ்வான் மறைவைத் தொடர்ந்து அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக இருந்து வந்தது. இதனையடுத்து, அந்த பதவிக்கு போட்டியிட்ட பாஜக மூத்த தலைவரும், பிகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சருமான சுஷில் குமார் மோடி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர்கள் தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி ஆகியோர் முன்னிலையில், தேர்தல் ஆணையர் சஞ்சய் குமார் அக்ரவால், சுஷில் குமார் மோடிக்கு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினார்.

இதையும் படிங்க:தேர்தலுக்கு வாக்களிக்க வருபவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள்

Last Updated : Dec 7, 2020, 10:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details