கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்கள் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது என கர்நாடக அமைச்சரும் பாஜக தலைவருமான கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இஸ்லாமியர்களுக்கு சீட் கிடையாது - அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!
பெங்களூர்: எங்கள் கட்சியில் இஸ்லாமியர்களுக்கு நிச்சயமாக சீட் வழங்க மாட்டோம் என கர்நாடக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈஸ்வரப்பா
இது குறித்து அவர் கூறுகையில், "எங்கள் கட்சியில் இந்துக்களுக்கு நிச்சயமாக சீட் வழங்கப்படும். லிங்காயத்துகள், குருபாக்கள், வக்காலிகாக்கள் அல்லது பிராமணர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்போம்.
ஆனால், நிச்சயமாக இஸ்லாமியர்களுக்கு சீட் வழங்க மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார். இவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.