தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’தெலங்கானா முதலமைச்சர் வரம்பு மீறி பேசுகிறார்’

ஹைதரபாத்: மத்திய அரசின் நிதிச்சலுகை குறித்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்த விமர்சனம் கண்டனத்திற்குரியது என பாஜக சாடியுள்ளது.

BJP
BJP

By

Published : May 19, 2020, 11:12 AM IST

கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சமாளிக்கும் விதமாக தற்சார்பு இந்தியா என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி நிதிச்சலுகையை மத்திய அரசு அறிவித்தது. இந்த நிதிச்சலுகை போலியானது, வெறும் எண்ணிக்கை வித்தையைக் காட்டி ஏமாற்றும் வேலை என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் அவர், மத்திய அரசின் அறிவிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்குக்கூட உருப்படியான திட்டங்கள் இல்லை எனவும் மாநில அரசுகளின் உரிமையைப் பறித்து பிச்சைக்காரர்களைப் போல் அலையவிடுவதாகவும் பகிரங்கமாக கூறினார்.

இந்த விமர்சனத்திற்கு தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ன சாகர் ராவ் பதில் கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், தெலங்கானா முதலமைச்சர் தனது முறையற்ற நிர்வாகம், ஊழல் மிகுந்த ஆட்சியின் காரணமாக நிதி கட்டமைப்பை மோசமாக வைத்துள்ளார். தனது குறையை மூடி மறைக்கவே மத்திய அரசின் மீது முறையற்றக் குற்றச்சாட்டை வாரி இறைக்கிறார்.

மத்திய அரசின் மீது வரம்பு மீறி விமர்சனத்தை முன் வைக்கும் சந்திரசேகர் ராவ், தனது எல்லையை உணர்ந்து பேச வேண்டும் என்றார்.

இதையும் படிங்க:சீனாவின் கைப்பாவையாக செயல்படும் உலக சுகாதார அமைப்பு - ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details