உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் எம்எல்ஏ குன்வர் பிரணவ் சிங், விருந்து நிகழ்ச்சி ஒன்றில் மது அருந்திவிட்டு துப்பாக்கிகளை வைத்து, உத்தரகாண்ட் அரசை விமர்சித்து நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை!
டேராடூன்: மதுபோதையில் துப்பாக்கியுடன் பாஜக எம்எல்ஏ குத்தாட்டமிட்ட வீடியோ வைரலானதையடுத்து, அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
வைரல் வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை!
இதனையடுத்து குன்வர் பிரணவ் சிங் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என பாஜக தெரிவித்திருந்தது. இது குறித்து உத்தரகாண்ட் பாஜக நிர்வாகி சியாம் சஜூ கூறுகையில், பிரணாவ் மீது கட்சி தலைமை கட்டாயம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும், அவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு கட்சி மேலிடத்தில் ஆலோசித்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக பத்திரிக்கையாளரை தாக்கியதாக பிரணவ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.