தமிழ்நாடு

tamil nadu

போலி கரோனா அறிக்கை சமர்ப்பித்த பாஜக எம்எல்ஏ : சிக்கியது எப்படி?

By

Published : Dec 27, 2020, 2:22 PM IST

லக்னோ (உத்தரப் பிரதேசம்) : வழக்கு விசாரணையிலிருந்து தப்பிக்க போலி கரோனா அறிக்கை தயார் செய்து சமர்பித்த பாஜக எம்எல்ஏ, அவருக்கு உதவி புரிந்த தலைமை மருத்துவ அலுவலர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

BJP MLA, CMO booked for fake Covid report in UP
BJP MLA, CMO booked for fake Covid report in UP

உத்தரப் பிரதேச மாநிலம், சாந்த் கபீர் நகரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராகேஷ் சிங் பாகல். இவர்மீது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கிற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணைக்கு செல்லாமல் தவிர்ப்பதற்காக, தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் போலி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இதுகுறித்த உண்மை நிலவரத்தை தெரிவிக்கும்படி நீதிமன்றம் வீட்டு தனிமைப்படுத்துதல் துறை அலுவலருக்கு முன்னதாக உத்தரவிட்டது. இதையடுத்து அரசு தரப்பில் அளிக்கப்பட்ட தகவலில், எம்எல்ஏ வீட்டில் தனிமைப்படுத்தப்படவில்லை, அவரைத் தொலைபேசியிலும் தொடர்புகொள்ள முடியவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பாஜக எம்எல்ஏ ராகேஷ் சிங் பாகல், அவருக்கு உடந்தையாக இருந்த சாந்த் என்னும் நபர், கபீர் நகர் தலைமை மருத்துவ அலுவலர் ஹர்கோவிந்த் சிங் ஆகியோர் மீது நீதிமன்ற உத்தரவின்பேரில் மோசடி, நீதிமன்றத்தை அவமதித்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சட்டம்லாம் மக்களுக்குத்தான் எங்களுக்கு இல்லை: பாஜக எம்.எல்.ஏவின் கூத்து

ABOUT THE AUTHOR

...view details