தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பாஜகவினர் பாசிஸ்டுகள், ஜனநாயக விரோதிகள்'- அசோக் கெலாட்

டெல்லி: பாரதிய ஜனதாவினரால் சிறிய விமர்சனங்களைக் கூட தாங்கிக் கொள்ள முடியாது. அவர்கள் பாசிஸ்டுகள், ஜனநாயக விரோதிகள் என சூடான கருத்துகளை ட்விட்டரில் அள்ளித் தெளித்துள்ளார் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்.

Ashok Gehlot  Sonia Gandhi  lockdown  Coronavirus  BJP  Congress  PM Modi  'பாஜகவினர் பாசிஸ்டுகள், ஜனநாயக விரோதிகள்'- அசோக் கெலாட்  அசோக் கெலாட், பாஜக, ராஜஸ்தான் முதலமைச்சர்
Ashok Gehlot Sonia Gandhi lockdown Coronavirus BJP Congress PM Modi 'பாஜகவினர் பாசிஸ்டுகள், ஜனநாயக விரோதிகள்'- அசோக் கெலாட் அசோக் கெலாட், பாஜக, ராஜஸ்தான் முதலமைச்சர்

By

Published : Apr 3, 2020, 11:46 AM IST

கரோனா (கோவிட்19) வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாட்டில் 21 நாள்கள் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த நாடு தழுவிய பூட்டுதலை காங்கிரஸ் விமர்சிக்கிறது, மக்களின் போராட்டத்தை காங்கிரஸ் பலவீனப்படுத்துகிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமித் ஷா இவ்வாறு கூறியிருந்தார். ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், “பாஜகவினரால் எதிர்க்கட்சியினரின் ஆக்கப்பூர்வ விமர்சனங்களைக் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சோனியா காந்தியின் பேச்சை திசை திருப்பும் வகையில் பாஜகவினரின் பேச்சு உள்ளது.

அவர்கள் ஜனநாயகத்தை நம்பவில்லை. அவர்கள் பாசிஸ்டுகள், ஜனநாயக விரோதிகள் என்று தான் சொல்ல வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். மற்றொரு ட்வீட்டில், “நெருக்கடியான இந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அவர் பகிங்கரமாக வரவேற்றிருக்க வேண்டும்.

ஒரு ஜனநாயகத்தில், எதிர்க்கட்சி சில தவறுகளை சுட்டிக்காட்டினால், அதனை நேர்மறையான மனநிலையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் விஷயங்களை மேம்படுத்த முடியும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 'ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் இழி செயல்'- யோகியை கண்டித்த ப.சி!

ABOUT THE AUTHOR

...view details