கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடத்திவருகிறது. அங்கு எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் குமாராசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் முக்கியக் கட்சியாக உள்ளது.
கர்நாடக அரசியல் களம்
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தியது. பின்னர் ஆட்சியில் அதிருப்தி ஏற்பட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் ராஜினாமா செய்ததால் அங்கு கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைத்தது.
பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் பாஜக தற்போது அங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்துகிறது. இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாக மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் நெருக்கம் காட்டிவருகிறது.
அம்மாநிலத்தில சட்டப்பேரவையில் பாஜக அரசு கொண்டுவந்த நில சீர்திருத்தச் சட்டத்திற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளித்தது. இதற்கு முன்னார் 2006ஆம் ஆண்டிலும் இரு கட்சிகள் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தின.