2020ஆம் ஆண்டுக்கான பிகார் மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.28ஆம் தேதி தொடங்கவுள்ள தேர்தல், நவ.7ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை நவ.10ஆம் தேதி நடைபெறுகிறது. கரோனா வைரஸ் பாதிப்பிற்கு நடுவே இந்தியாவில் நடக்கவுள்ள முதல் தேர்தல் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதல் கட்ட தேர்தல் 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகள் நடத்தப்படுகிறது. தேர்தலுக்கான அறிவிக்கை அக்.1ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அக். 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் திரும்பப்பெறுதல்: 12ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் 28ஆம் தேதி நடக்கவுள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தல் 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் நடக்கவுள்ளது. இதற்கான அறிவிக்கை அக்.9ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய அக். 16ஆம் தேதி கடைசி நாளாகும். இதனை திரும்பப்பெறுவதற்கு அக்.19ஆம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் நவ.3ஆம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட தேர்தல் 15 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளில் நடக்கவுள்ளது. இதற்கான அறிவிக்கை அக்.13ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அக். 20ஆம் தேதியும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு அக்.23ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட தேர்தல் நவம்.7ஆம் தேதி நடக்கவுள்ளது.