தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 15, 2020, 2:52 PM IST

ETV Bharat / bharat

புதிய கட்சித் தொடங்கினார் சந்திரசேகர் ஆசாத்

டெல்லி: ஆசாத் சமாஜ் கட்சி என்ற புதிய கட்சி ஒன்றை பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் இன்று தொடங்கியுள்ளார்.

azad
azad

2022ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் பீம் ஆர்மி அமைப்பின் நிறுவனர் சந்திரசேகர் ஆசாத் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் இளம் பட்டியலினத் தலைவரான சந்திர சேகர் ஆசாத், சஹ்ரான்பூர் பகுதியில் பட்டியலினப் பிரிவினருக்கும் முற்பட்ட பிரிவினருக்கும் நிகழ்ந்த மோதலின்போது, இளம் பட்டியலினத் தலைவராக செயல்பட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.

உத்தரப் பிரதேச மாநில அரசு ஆசாத்தை பலமுறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தின் போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட ஆசாத் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது ஆசாத் சமாஜ் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள சந்திரசேகர் ஆசாத், உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் சமாஜ்வாதி கட்சிக்குப் போட்டியான பட்டியலின சமூகக் கட்சியாக தன்னை முன்னிறுத்தி செயல்படுவார் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க:பாரதிய ஜனதா சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி: மாநிலத் தலைவர் எல். முருகன்

ABOUT THE AUTHOR

...view details