செப்டம்பர் 11ஆம் தேதியில் நிகழ்ந்த இந்தியாவின் முக்கிய இரண்டு நிகழ்வுகளை பிரதமர் மோடி நினைவுகூர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்த நன்னாளில்தான் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடந்த முதல் உலக மத மாநாட்டில் தனது உரையை ஆற்றினார். அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை, இந்தியாவின் ஒரு அங்கமாக திகழ்கிறது.
மேலும், ஆச்சார்யா வினோபா பாவேயின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூர்ந்த மோடி, 1918ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி பாவே பற்றி எழுதியதை குறிப்பிட்டிருந்தார். அதில், "உன்னைப் புகழ்வது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை. உங்கள் அன்பும், தன்மையும் என்னைக் கவர்ந்திழுக்கிறது, அதேபோல் உங்கள் சுயபரிசோதனையும் உங்கள் மதிப்பை அளவிட நான் தகுதியற்றவன் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், சுவாமி விவேகானந்தர் மற்றும் ஆச்சார்ய வினோபா பாவே ஆகியோரது மனிதநேய சிந்தனையை பின்பற்றியிருந்தால் செப்டம்பர் 11, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.