பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஓடுபாதை நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நியூ சவுத் பேரலல் ரன்வேயில் (என்எஸ்பிஆர்) இருந்து விமானம் அன்றைய தினம் மாலை 4.37 மணிக்கு புறப்பட்டது.
புதிய ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட முதல் விமானம் இண்டிகோ ஆகும். இந்த விமானம் பெங்களூருவிலிருந்து ஹைதராபாத்திற்குச் சென்றது. இது இரண்டாவது ஓடுபாதையிலிருந்து மாலை 4.37 மணிக்கு புறப்பட்டது.
சிவில் ஏவியேஷன் பாதுகாப்புப் பணியகத்திடமிருந்து தேவையான ஒழுங்குமுறை அனுமதியைப் பெற்ற பிறகு, நியூ சவுத் பேரலல் ஓடுதளம் (என்எஸ்பிஆர்) அதிகாரப்பூர்வமாகச் செயல்பாட்டுக்கு நேற்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
விமான ஓடுதளமானது நான்காயிரம் மீட்டர் நீளம், 45 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுதளம் நாட்டிலேயே முதன்மையானது. இது ஒரே நேரத்தில் விமானம் தரையிறங்கவோ அல்லது புறப்படவோ உதவுகிறது.
இதையும் படிங்க: மும்பை விமானம் 8 மணிநேரம் தாமதம் - பயணிகள் கடும் அவதி