கோவிட்-19 நோயை எதிர்த்துப் போராடுதல், அறிவுரைகள்-நடவடிக்கைகள், கடினமான நோய்த்தொற்று சூழ்நிலையில் மக்கள் ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டியவைகள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டுசெல்லஆயுஷ் அமைச்சகம்-மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைந்து ஆயுஷ் சஞ்சீவனி என்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளன.
மேலும் இந்தச் செயலியில் அமைச்சகத்தின் செயல்கள் குறித்து மக்கள் அளிக்கும் கருத்துகளையும் பதிவுசெய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலி 50 லட்சம் மக்களைச் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலியைப் பயன்படுத்துவோர் தெரிவிக்கும் பின்னூட்டங்களைக் கருத்தில்கொண்டும், பொதுமக்களுக்குத் தேவையான அறிவிப்புகள் என்னவென்று ஆராயவும் இந்தச் செயலி உதவுவதாகவும் இவை அனைத்தும் ஆவணப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய ஆராய்ச்சி கவுன்சில்கள், அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நிறுவனங்கள், வெவ்வேறு ஆயுஷ் கல்வி நிறுவனங்கள், மாநில அரசுகளின் அமைப்புகள் செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
இந்தச் செயலியின் மூலம் மத்திய அரசு வெளியிடும் தகவல்களைப்பெற விரும்புவோர், நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் மேற்கொள்ளவுள்ள ஆய்வில் பங்கெடுப்பதற்கு இணையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:காவலர்களின் நலனிற்காக தொடங்கப்பட்ட ஆயுரக்ஷ் திட்டம்!