தமிழ்நாடு

tamil nadu

கரோனாவுக்கு ஆயுர்வேதத்தில் மருந்து இல்லை: கோவா முதலமைச்சர் பேச்சு

By

Published : Apr 10, 2020, 3:18 PM IST

பனாஜி: கரோனாவுக்கு ஆயுர்வேதத்தில் மருந்து இல்லை என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

Pramod Sawant  Goa  Chief Minister  Cure  Novel Coronavirus  Ayurveda  Alternative Medicine  Immunity  COVID 19  Patients  Treatment  கோவிட்-19 பெருந்தொற்று  ஆயுர்வேதம், கோவா முதலமைச்சர்
Pramod Sawant Goa Chief Minister Cure Novel Coronavirus Ayurveda Alternative Medicine Immunity COVID 19 Patients Treatment கோவிட்-19 பெருந்தொற்று ஆயுர்வேதம், கோவா முதலமைச்சர்

ஆயுர்வேத மருத்துவரான அவர் இதுகுறித்து கூறுகையில், 'ஆயுர்வேதத்தில் கோவிட்-19ஐ குணப்படுத்துவதற்கான சிகிச்சை இல்லை.

இது கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்து என்னென்ன வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆயுர்வேத மருத்துவர்கள் எங்கள் மருத்துவ குழுக்களுடன் கலந்தாலோசித்து வருகின்றனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறு நோயாளிகளுக்கும் மாநில அரசால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆயுர்வேதம் மற்றும் அலோபதி மருத்துவத்தை ஒருங்கிணைத்து வழங்கும் நாட்டின் முதல் மாநிலம் கோவாதான்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details