தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 11, 2020, 12:14 PM IST

ETV Bharat / bharat

எச்சரித்தும் செயல்படத் தவறிய மம்தா அரசு - மேற்கு வங்க ஆளுநர் சாடல்!

கொல்கத்தா: மேற்கு வங்க நிர்வாகத்திற்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து எச்சரிக்கைவிடுத்த போதிலும் நிர்வாகம் செயல்படத் தவறிவிட்டதாக அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எச்சரித்தும் செயல்படத் தவறிய மம்தா அரசு -மேற்கு வங்க ஆளுநர் சாடல்!
எச்சரித்தும் செயல்படத் தவறிய மம்தா அரசு -மேற்கு வங்க ஆளுநர் சாடல்!

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக தேசிய தலைவர்கள் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி நேற்று (டிச. 10) மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்கியா சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

இதனையடுத்து, டைமண்ட் துறைமுகத்திற்கு இருவரும் சென்றுகொண்டிருந்தபோது அவர்களது பாதுகாப்பு வாகனம் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. பெரிய செங்கல் ஒன்றும் இந்தப் பாதுகாப்பு வாகனத்தை நோக்கி எறியப்பட்டது. இதில் ஜெ.பி. நட்டாவுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. விஜய் வர்கியாவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பாஜக தலைவர்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு அக்கட்சியினர் பலர் கடும் எதிர்ப்பும், கண்டனங்களையும் தெரிவித்தனர். மேலும், இந்தத் தாக்குதலுக்கு திரிணாமுல் காங்கிரஸ்தான் காரணம் என அக்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர், “பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவின் பேரணி திட்டமிடப்பட்டிருந்து. இந்தப் பேரணியில் சட்ட ஒழுங்குப் பிரச்சினை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக முன்னதாகவே மாநில தலைமைச் செயலருக்கும், காவல் ஆணையருக்கும் எச்சரிக்கைவிடப்பட்டது. இருந்தபோதிலும், இதில் கோட்டையைவிட்டது மம்தா அரசு” என்றார்.

நட்டா ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை காவல் துறையினர் தடுக்கத் தவறிவிட்ட காவல் துறையினர் எனக் குற்றஞ்சாட்டியுள்ள ஆளுநர், டைமண்ட் துறைமுக காவல் கண்காணிப்பாளர் போல் நாத் பாண்டே ஒரு அரசு அலுவலராகச் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.

இதையும் படிங்க...‘கூட்டம் சேராத ஆதங்கத்தில் நாடகமாடும் பாஜக’ - மம்தா தாக்கு

ABOUT THE AUTHOR

...view details