தமிழ்நாடு

tamil nadu

கடைகளை மூடச் சொன்ன போலீசார் மீது கற்கள் வீச்சு; அசாமில் அடாவடி!

By

Published : Mar 28, 2020, 9:36 PM IST

கவுகாத்தி: ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் கடைகளைத் திறந்து வைத்திருந்தவர்களை எச்சரித்த காவல் துறையினர் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் அசாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

assam
assam

அசாம் மாநிலம் போங்கைகவுன் (Bongaigaon) மாவட்டத்தில் உள்ளது பவுலகிரி போடி பஜார் பகுதி. கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பகுதியில் மட்டும் கடைகள் வழக்கம்போல் இயங்குவதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த காவல் துறையினர், கடைகளை மூடுமாறு எச்சரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், கைகளில் கிடைத்த கற்கள் உள்ளிட்டவற்றால் காவல் துறையினரைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத காவல் துறையினர், உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காவல் துறையினர் மீது கற்கள் வீச்சு

இதுகுறித்து பேசிய போங்கைகவுன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிங்கா ராம் மிலி, அப்பகுதியியில் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details