அஸ்ஸாம் மாநிலத்தில் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் மூன்று கோடிக்கு மேற்பட்டோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருந்தது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலம் நாகயோன் (Nagaon) மாவட்டத்தை அடுத்த போர்குலி (Borghuli) கிராமத்தைச் சேர்ந்த ரஹிமா பேகம் என்ற பெண் தனது கணவர் உள்பட ஐந்து குழந்தைகளின் பெயர்கள் என்.ஆர்.சி. பெயர் பட்டியலில் இடம் பெயரவில்லை என்று கடுமையான மனஅழுத்தத்தில் இருந்துவந்துள்ளார்.