ஹரியானாவைச் சேர்ந்த மூத்த சமூக சீர்திருத்தவாதியான ஸ்வாமி அக்னிவேஷ் இன்று(செப். 11) காலமானார். 80 வயதான அக்னிவேஷ் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி ஐ.எல்.பி.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
1970ஆம் ஆண்டு ஆரிய சமாஜ் என்ற அமைப்பைத் தொடங்கிய அக்னிவேஷ், மத நல்லிணக்கம், சமூக சீர்திருத்தம், பெண்கள் மேம்பாடு, பெண் சிசுக்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டார்.
ஹரியானா மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த இவர், அம்மாநிலத்தின் கல்வி அமைச்சராகவும் பதவிவகித்துள்ளார். 2011ஆம் ஆண்டு அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக முன்னின்று நடத்திய போராட்டத்தில், இவர் முக்கிய புள்ளியாகவும் விளங்கினார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:உ.பி.,யில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சொத்துரிமை வழங்க சட்டத்திருத்தம்!