தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பயங்கரவாதத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை: பிபின் ராவத்

சென்னை: பயங்கரவாதத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை என இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

Bipin Rawat

By

Published : Sep 23, 2019, 2:28 PM IST

Updated : Sep 24, 2019, 2:39 PM IST

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அலுவலர்கள் பயிற்சி மையத்தில் இளம் அலுவலர்களுக்கான பயிற்சிப் பிரிவை ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானால் இந்தியாவிற்குள் பயங்கரவாதம் பரப்பப்படுகிறது. முக்கியமாக ஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தானால் அதிகளவில் பயங்கரவாதம் பரப்பப்படுகிறது என குற்றம்சாட்டினார்.

Bipin Rawat speech - 1

மேலும் அவர், பயங்கரவாதத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை, இரண்டிற்கும் தொடர்புள்ளது போல தவறான கருத்துகள் பரப்பப்படுகிறது. சீனாவுடனான எல்லைப் பிரச்னையில், இரு நாட்டுத் தலைவர்களின் முயற்சியால் அமைதியான சூழல் நிலவுகிறது.

காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கும் உதவுபவர்களுக்குமான தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது. வன்முறைகள் கட்டுப்படுத்தப்பட்டு பயங்கரவாதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Bipin Rawat speech - 2

காஷ்மீரிகள் கடைகள் மூடப்பட்டிருப்பதாகத் தவறான தகவல்களை பயங்கரவாதிகள் பரப்ப முயற்சிக்கின்றனர். கடைகள் மூடப்பட்டிருந்தால் காஷ்மீர் மக்களுக்கு எப்படி இத்தனை நாட்களுக்கு உணவு கிடைக்கும் என கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து, பாலாகோட் விமானப்படைத்தளம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக பிபின் ராவத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இம்ரான்கான் முன்பு மோடியின் பாகிஸ்தான் வெறுப்பு பேச்சு!

Last Updated : Sep 24, 2019, 2:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details