தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செய்தி நிறுவனங்கள் பொய்யான தகவல்கள் வெளியிட்டால்...! - அதிரடிகாட்டும் ஜெகன்மோகன்

அமராவதி: செய்தி நிறுவனங்களில் அரசு குறித்து தவறான, பொய்யான, அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டால் வழக்குத் தொடரப்படும் என ஆந்திரா அரசு அறிவித்துள்ளது.

AP govt to take legal action against fake news

By

Published : Nov 1, 2019, 9:06 AM IST

தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், வார இதழ்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் அரசுக்கு எதிராகப் பொய்யான செய்திகள் பரவுவதைத் தடுக்க 2007ஆம் ஆண்டு மறைந்த ராஜசேகர் ரெட்டி முதலமைசராக இருந்துபோது சட்டம் கொண்டுவந்தார். இந்தச் சட்டம் கடும் எதிர்ப்பு காரணமாக அமல்படுத்தப்படவில்லை. ஆனால் தற்போது அந்தச் சட்டம் சில திருத்தங்களுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அரசு குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக விமர்சித்தால், அரசு குறித்து பொய்யான கருத்துகளைத் தொலைக்காட்சிகள் பரப்பினால், அரசு குறித்து தவறான செய்திகளை நாளேடுகள் வெளியிட்டால் இனி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வாட்ஸ்ஆப் பயனர்களை குறிவைக்கும் இஸ்ரேல் ஹேக்கர்கள்!

இது தொடர்பாக ஆந்திர அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், "தவறான, ஆதாரமற்ற, அவதூறான செய்திகளைத் திட்டமிட்டு ஆர்வத்துடன் பரப்புவதன் மூலம் சில அச்சு, மின்னணு, சமூக ஊடக நிறுவனங்கள் வேண்டுமென்றே அரசு, அலுவலர்களின் பெயர்களைக் கெடுக்க முயல்வதாகத் தகவல்கள் கிடத்துள்ளன.

உண்மையான, சரியான தகவல்கள் மக்களுக்கு எட்டப்படுவதைக் கண்காணிக்க சட்டத்தின் பொருத்தமான பிரிவுகளின் கீழ் வழக்குகளைத் தாக்கல் செய்ய அரசு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் சிறப்பு ஆணையருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details