குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒருபகுதியாக உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் போராட்டம் நடைபெற்றது. இது வன்முறையாக வெடிக்க கலவரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உறவினர்களைச் சந்திக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மீரட் சென்றனர்.
மீரட் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி மறுப்பு?
லக்னோ: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Raga
இந்நிலையில், மீரட் செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் டெல்லி சென்றனர். போராட்டத்தை கலவரமாக மாற்றி வன்முறையை தூண்டியவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனக் காவல் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸை முன்னிட்டு விழாக்கோலம் பூண்ட மேதக் தேவாலயம்!