ஏப்ரல் 19ஆம் தேதியன்று 55 வயதாகும் மிராஜுதீன் என்பவர் சுவாசப் பிரச்னைக் காரணமாக அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக இவருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டார்.
இவர் குறித்து மாவட்ட மருத்துவ நிர்வாகத்திற்கு தகவல் எதுவும் அளிக்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து அடுத்த நாளே இவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆலிகார் மாவட்ட நீதிபதி சந்திர பூஷன் பேசுகையில், ''மருத்துவமனையில் பணிபுரிவோர் மாவட்ட மருத்துவக் குழுவினருக்கு நேரம் கடந்து தகவல் கொடுத்துள்ளனர். இதனால் பல்வேறு தரப்பினருக்கும் கரோனா வைரஸ் பரவுவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது'' என்றார். மேலும், அந்த மாவட்டத்தில் புதிதாக இரண்டு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று அறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட மருத்துவக் குழுவினர் கூறுகையில், ''நோயாளிகள் குறித்த சரியான நேரத்தில் தகலளிக்காதது ஏன் என அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். அதேபோல் மிராஜுதீன் இரண்டு நர்சிங் ஹோம்களில் எக்ஸ் ரே எடுத்துள்ளார். அந்த நர்சிங் ஹோம்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர் அஞ்சும் சுக்தய் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்'' என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர் காலித் உள்பட மூவர் மீது பாய்ந்த உபா சட்டம்
!