உலகின் பெரிய காடுகளில் அமேசான் காடு ஒன்றாகும். இந்தக் காட்டில் பல அரிய விலங்குகள் வாழ்ந்துவருகின்றன. கடந்த சில நாட்களாக இந்தக் காட்டில் தீ பரவிவந்துள்ளது. இதனால், அமேசான் காட்டுக்கு அருகே உள்ள பொலிவியா நாட்டில் 7,500 கிலோ மீட்டர் நிலம் பாதிப்படைந்துள்ளது. இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
அமேசான் காட்டுத் தீயை அணைக்க நடவடிக்கை!
பிரேசிலியா: அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமேசான் காடு
இந்த காட்டுத் தீயை அணைக்க பிரேசில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என உலக நாடுகள் குற்றம்சாட்டியது. இந்நிலையில், தீயை அணைக்க பிரேசில் அரசு ராணுவத்தினை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ நாட்டின் வளர்ச்சிக்கு காடுகள் தடையாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து பெரும் விமர்சனத்துகுள்ளானது.