தமிழ்நாடு

tamil nadu

குடிபெயர் தொழிலாளர்களுக்கு பிரதமரின் சிறப்புத் திட்டம்...!

By

Published : Jun 20, 2020, 9:31 PM IST

பாட்னா: கரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான குடிபெயர் தொழிலாளர்களுக்கு ரூ. 50,000 கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

PM Yojana
PM Yojana

கரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட குடிபெயர் தொழிலாளர்களுக்கு 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிகார் மாநிலம் கர்காரியா மாவட்டத்தில் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • பிகாரில் 32, உத்தரப் பிரதேசத்தில் 31, மத்தியப் பிரதேசத்தில் 24, ராஜஸ்தானில் 22, ஒடிசாவில் நான்கு, ஜார்கண்டில் மூன்று என மொத்தம் 116 மாவட்டங்களில் இந்தத் திட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.
  • மேற்கண்ட 116 மாவட்டங்களில்தான் அதிகளவிலான குடிபெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து திரும்பியுள்ளனர். அவர்களுக்கு 125 நாள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
  • மத்திய அரசின் கீழ் உள்ள 12 அமைச்சகங்களான ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, கணிமம், குடிநீர் மற்றும் சுகாதாரம், சுற்றுச்சூழல், ரயில்வே, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வேளாண்மை, தொலைத்தொடர்புத்துறை ஆகியவற்றின் கீழ் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • இந்தத் திட்டம் பிகாரில் தொடங்க இரு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று அதிகளவிலான குடிபெயர் தொழிலாளர்களைக் கொண்ட மாநிலமாக பிகார் விளங்குகிறது. அடுத்ததாக, இந்தாண்டு இறுதியில் பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, ஆளும் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெறவேண்டும் என இதுபோன்ற நகர்வுகளை மத்திய அரசு மேற்கொள்கிறது.

இதையும் படிங்க:பிளாஸ்மா சிகிச்சை: டெல்லி அமைச்சர் உடல்நிலையில் முன்னேற்றம்

ABOUT THE AUTHOR

...view details