தமிழ்நாடு

tamil nadu

தொழிலதிபர் ராமோஜி ராவ் வாழ்க்கை வரலாற்று புத்தகம் வெளியீடு!

தாவனகெரே: ராமோஜி குழுமத் தலைவர் பத்ம விபூஷன் ராமோஜி ராவின் வாழ்க்கை வரலாற்றை 'அக்ஷரா யோதா ராமோஜி ராவ்' என்ற தலைப்பில் பிரபல கன்னட எழுத்தாளர் வி. ஹனுமத்தப்பா எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

By

Published : Dec 17, 2019, 1:01 AM IST

Published : Dec 17, 2019, 1:01 AM IST

ராமோஜி ராவ் வாழ்க்கை குறித்த புத்தகம் வெளியீடு, Akshara yodha ramoji rao book released
ராமோஜி ராவ் வாழ்க்கை குறித்த புத்தகம் வெளியீடு, Akshara yodha ramoji rao book released

தெலுங்கு ஊடக உலகின் முன்னோடியான ஈநாடு பத்திரிகை, ஈடிவி தொலைக்காட்சி உள்ளிட்டவைகளை நிறுவியவர் ராமோஜி ராவ். இவர், ஊடகத்துறையில் மட்டுமல்லாது திரை உலகிலும் முக்கிய பங்கு வகித்துவருகிறார். இவரது பெயரில் இயங்கிவரும் ராமோஜி ஃபிலிம் சிட்டி என்னும் திரைப்பட படப்பிடிப்பு தளம் உலகின் மிகப்பெரிய படிப்பிடிப்பு ஸ்டூடியோ என்ற பெருமையையும் கொண்டுள்ளது.

ஊடகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தொழிலதிபர் ராமோஜி ராவை கௌரவிக்கும் விதமாக இவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி பெருமைப்படுத்தியது.

இதனிடையே ராமோஜி ராவின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் பிரபல கன்னட எழுத்தாளரும், பத்திரிகையாளருமான வி. ஹனுமத்தப்பா ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். ராமோஜியின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்ட ஹனுமத்தப்பா அவர் குறித்த தகவல்களையும் படங்களையும் ஈநாடு பத்திரிகையில் இருந்து சேகரித்துள்ளார்.

ராமோஜி ராவ் வாழ்க்கை குறித்த புத்தகம்

இதையடுத்து ராமோஜி ராவ் வாழ்க்கை குறித்த புத்தகத்தை கன்னட மொழியில் ஹனுமத்தப்பா எழுதினார். அக்ஷரா யோதா ராமோஜி ராவ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா கர்நாடக மாநிலம் தாவனகெரேவில் நடைபெற்றது. இந்தப் புத்தகத்தை தெலுங்கு, கன்னடா, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துவரும் பிரபல நடிகர் சாய் குமார் வெளியிட்டார்.

ராமோஜி ராவ் வாழ்க்கை குறித்த புத்தகம் வெளியீடு

இப்புத்தகத்தில், ஊடகத்துறையில் ராமோஜி பதித்த தடம், கடும் சவால்களுக்கிடையே அவர் எவ்வாறு ஈநாடு, ஈடிவி ஆகியவற்றை உருவாக்கினார் என்பது குறித்தும் ராமோஜி ஃபிலிம் சிட்டியை உருவாக்கியது குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், ராமோஜி ராவ் வாழ்க்கையில் சந்தித்த கடுமையான சவால்களும் அதை அவர் எதிர்கொண்ட விதம் குறித்தும் இப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ராமோஜியின் குடும்பம் குறித்த தகவல்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details