தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய அளவில் சென்னை ஐ.ஐ.டி.க்கு முதலிடம்; 14-வது இடத்தில் அண்ணா பல்கலை!

சென்னை: சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 14வது இடம் பிடித்துள்ளது.

ramnath

By

Published : Apr 8, 2019, 8:01 PM IST

Updated : Apr 9, 2019, 2:04 PM IST

இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை ஆய்வு செய்து, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டிற்கான தேசிய தரவரிசைப் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டுள்ளார். சிறந்த பல்கலைக்கழகம், சிறந்த கல்லூரி, சிறந்த பொறியியல் கல்வி நிறுவனம், மேலாண்மைப் படிப்பு நிறுவனம், மருந்தியல் கல்வி நிறுவனம், மருத்துவ கல்வி நிறுவனம், கட்டிடக்கலை கல்வி நிறுவனம், சட்டம் ஆகிய 9 துறைகளின் கீழ் தனித்தனியே அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் ஒட்டுமொத்தமாகச் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.

ராம்நாத்

இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி, ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கட்டுரை வெளியிடுதல், பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியில் செல்லும் எண்ணிக்கை, அவர்களுக்குப் பணியிடத்தில் கிடைக்கும் சம்பளம், ஆராய்ச்சி பட்டப்படிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டன.

அதன் அடிப்படையில், ஒட்டு மொத்த தரவரிசைப் பட்டியலில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் முதலிடத்தினையும், பெங்களுர் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் நிறுவனம் 2-வது இடத்தையும், டெல்லி ஐஐடி 3ஆம் இடத்தையும், மும்பை ஐஐடி 4-வது இடத்தையும், கரக்பூர் ஐஐடி 5ஆம் இடத்தையும், கான்பூர் ஐஐடி 6ஆம் இடத்தையும், ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 7ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தையும், ஒட்டு மொத்தமாக 14 வது இடத்தையும் பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 60.35 புள்ளிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் 21வது இடத்திலும், வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 32வது இடத்திலும், சென்னை பல்கலைக் கழகம் 33வது இடத்தையையும் பெற்றுள்ளது.

இந்தியாவில் சிறந்த பல்கலைக் கழகங்களில் பெங்களுர் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் முதலிடத்தையும், டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகம் 2வது இடத்தையும், வாரனாசி பனரஸ் இந்து பல்கலைக்கழகம் 3ஆம் இடத்தையும், ஐதராபாத் பல்கலைக்கழகம் 4ஆம் இடத்தையும், கொல்கத்தா பல்கலைக்கழகம் 5ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.

தமிழகத்தில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் 60.35 புள்ளிகள் பெற்று 6வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பல்கலைக்கழகம் கடந்த 2018ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியலில் 4 வது இடம் பெற்றிருந்தது. ஆனால், தற்போது பின்னோக்கி சென்றுள்ளது. கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் 14வது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 20வது இடத்தையும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 44வது இடத்தையும் பெற்றுள்ளது. சிறந்த கல்லூரிகள் தரவரிசை பட்டியலில் டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடத்தையும், டெல்லி ஹிந்து கல்லுாரி 2ஆம் இடத்தையும், சென்னை மாநிலக் கல்லூரி 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

அதேபோல், நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் முதல் 8 இடங்களை இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி நிறுவனம் 8 மாநிலங்களில் இருந்து பெற்றுள்ளது. அதில் தமிழகத்தில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் 9வது இடத்தினை பிடித்துள்ளது. வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 18வது இடத்தையும் பிடித்துள்ளது.

Last Updated : Apr 9, 2019, 2:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details