தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு சமீபகாலமாக அபாயகர அளவைத் தாண்டி வருகிறது. குறிப்பாக, நவம்பர் மாதம் தொடங்கி பனிக்காலம் முழுவதும் அங்கு காற்று மாசு தீவிரத்தை அடைந்துவருகிறது.
இதனால் டெல்லி வாசிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதன்படி, டெல்லியில் காற்றின் தரம் இன்று(டிச.22) அதிகாலை மிகவும் மோசமாக இருந்தது. இது வரும் நாட்களிலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி தரக் குறியீட்டு அளவு 329ஆக இருந்துள்ளது. காற்று மாசு குறியீடு 300 என்ற இலக்கத்தைத் தாண்டினால் அது மிக மோசமான அளவு எனக் கூறப்படும். கோவிட் பரவல் காலம் என்பதால், மக்கள் இப்பனிக்காலத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்கு வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக வானிலை மாற்றம் கண்டு, கடும் பனி மூட்டம் நிலவுகிறது. அண்டை மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலியில் ஏற்பட்டிருக்கும் பனிப்பொழிவின் தாக்கமும், இப்பனி மூட்டத்திற்கு காரணமாக அமையும் என, வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:வேட்பாளர் செலவுத்தொகை உச்ச வரம்பில் மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!