மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்திற்கு பயணி ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் கொல்கத்தா விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மோகினி மோன்டால் என்ற 25 வயது பெண்மணி தான் பயணம் செய்த ஐ5316 விமானத்திற்கு தீடீரென்று வெடிகொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். விமானம் வானில் செலுத்தப்பட்ட சில நொடிகளில் மோகினி துண்டு சீட்டு ஒன்றை விமான கேப்டனிடம் தந்துள்ளார். அதில் தனது உடலில் வெடிகுண்டு கட்டப்பட்டுள்ளதாகவும், அது எந்நேரத்திலும் வெடிக்கலாம் எனவும் எழுதியிருந்துள்ளது.
இதனார் அதிர்ச்சியடைந்த அலுவலர்கள் விமானத்தை கொல்கத்தா விமானநிலைத்தில் அவசரமாகத் தரையிறக்கினர். விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அது பொய் மிரட்டல் எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, விமானத்திற்கு பொய் மிரட்டல் விடுத்த நபரை மத்திய பாதுகாப்புப் படையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விமானத்தின் பாதுகாப்பு வசதி உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, விமானம் மும்பை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க: கல்விக்கான நிதியைக் குறைப்பதா ? ஆதரிக்க மாட்டேன்' - நோபல் பரிசு பெற்ற இந்தியர்