அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரையை கெவாடியாவில் உள்ள சிலையுடன் இணைக்கும் கடல் விமான சேவையை கடந்த அக்டோபர் 31ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அகமதாபாத் முதல் கெவாடியா வரை 220 கி.மீ. தூரத்தை 45 நிமிடங்களுக்குள் வந்தடையும்.
19 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வழங்குகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக கடல் விமான சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது.
இது குறித்து ஸ்பைஸ் ஜெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த விமானம் தற்போது பராமரிப்பு பணிகளுக்காக மாலத்தீவு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த விமானத்தை பராமரிக்கும் வகையிலான பராமரிப்பு மையம் தற்போது அகமதாபாத்தில் கட்டுமானத்தில் உள்ளது.