தமிழ்நாடு

tamil nadu

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, 'கை' கொடுக்கும் காங்கிரஸ்!

By

Published : May 4, 2020, 9:37 PM IST

டெல்லி: நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் அஹமது பட்டேல் வலியுறுத்தியுள்ளார்.

Senior Congress leader Ahmed Patel  congress news  Ministry of Home Affairs news  migrant workers in UP  Congress news  Sonia Gandhi news  கரோனா, கோவிட்-19, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னை, காங்கிரஸ், அஹமது பட்டேல் ட்வீட்
Senior Congress leader Ahmed Patel congress news Ministry of Home Affairs news migrant workers in UP Congress news Sonia Gandhi news கரோனா, கோவிட்-19, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னை, காங்கிரஸ், அஹமது பட்டேல் ட்வீட்

நாடு தழுவிய ஊரடங்கு வருகிற 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஏழைகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் அஹமது பட்டேல், ட்வீட் செய்தி வாயிலாக காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளில், 'புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், உள்ளூர் தொண்டர்கள் அனைத்து வளங்களையும் திரட்ட வேண்டும்' என கூறியுள்ளார்.

மேலும், 'இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம், உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் தயவுசெய்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியைத் தொடர்பு கொள்ளவும்' என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், 'புலம்பெயர்ந்த தொழிலாளிகளின் வாழ்வு ஆதாரம் மற்றும் தொழிலாளியின் சொந்த ஊர் ரயில் பயணத்திற்கான செலவை தனது கட்சி ஏற்கும்' என்று கூறியிருந்தார்.

மேலும், ’இந்த உதவியை மக்களுக்கு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய பாஜக அரசை தொடர்ந்து வலியுறுத்தியது. ஆயினும் அவர்கள் புறக்கணித்தனர்' என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையும் படிங்க: மது மயக்கத்தில் தேனீயாய் மாறிய வாடிக்கையாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details