கொச்சி:தமிழ், மலையாளம், இந்தி திரைப்படங்களில் நடித்துவருபவர் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன். இவர் தமிழில் மொழி, சத்தம் போடாதே நினைத்தாலே இனிக்கும், கனா கண்டேன், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் தமிழ், மலையாள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சில மாதங்களுக்கு முன்பு திரைப்படப் படப்பிடிப்பிற்காக ஜோர்டன் சென்ற இவர், கரோனா வைரஸ் தொற்று காரணத்தினால், அந்நாட்டிலேயே சிக்கிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.
பின்னர், கடந்த ஜூன் மாதம் நாடு திரும்பிய அவர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகிவரும் ஜனகனமன திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.