புதுச்சேரி நகரப்பகுதியில் அமைந்துள்ள கோவிந்த சாலை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இரு சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே ஏற்கனவே பிரச்னை இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் அங்குள்ள சமுதாயக் கூடத்தில் இருந்த விளையாட்டு சாதனங்களை ஒரு தரப்பினர் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், மதுபோதையில் அவர்கள் அப்பகுதி வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அதனை காவலர்கள் ஏற்க மறுத்ததால் ஒரு தரப்பு மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமுதாய நலக்கூடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை இதையடுத்து தக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தன் பேரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய போக்சோ குற்றவாளி !