நாடு முழுவதும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவுதலால், 21 நாள்களுக்கு ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, காய்கறி விலையேற்றம், வேலையிழப்பு, குடும்பத்தைப் பார்க்கும் ஏக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக தொழிலாளர்கள் கால்நடையாகவும், வேன், லாரி ஆகிய வாகனங்களில் கிளம்பினர்.
தெலங்கானா விபத்து - உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு!
ஹைதராபாத்: ஊரடங்கு உத்தரவை மீறி சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் வந்த வேன் விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தெலுங்கானாவின் சூர்யாபேட்டையில் இருந்து கர்நாடகாவின் ராய்சூர் வரை 31 தொழிலாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குழுவை ஏற்றி சென்ற வேன், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இருவர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து காவல் உதவி ஆணையர் விஸ்வ பிரசாத் தெரிவிக்கும்போது, "கோல்கொண்டா வழியாக குஜராத்துக்கு மாம்பழம் ஏற்றிவந்த லாரி, வேன் மீது மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரின் நிலை மோசமாகவுள்ளது. மற்றவர்கள் சிறுகாயங்களுடன் உயிர் பிழைத்திருக்கின்றனர். விபத்தில் இதுவரை இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: 'பணப் புழக்கம் அதிகரிப்பு, குறைந்த வட்டியில் கடன்'- நடுத்தர வர்க்கத்துக்கு இனிப்பான செய்தி!