பால்கோட் தாக்குதலுக்குப் பிறகு இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் எஃப் 16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. இவ்விமானத்தை மிக் 21 ரக போர் விமானத்தினால் இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். அப்போது இந்திய விமானம் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதையடுத்து அவ்விமானத்தை இயக்கிய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவரிடம் விசாரணையை மேற்கொண்டது பாகிஸ்தான் ராணுவம். பின்னர், அமைதி நடவடிக்கை என்று கூறி வாகா எல்லையில் இந்திய ராணுவத்திடம் அபிநந்தனை ஒப்படைத்து பாகிஸ்தான் ராணுவம்.
வந்துட்டேனு சொல்லு; திரும்ப வந்துட்டேனு சொல்லு -ராணுவ விமானி அபிநந்தன்!
பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன், நீண்ட நாட்களுக்கு பிறகு மிக் 21 ரக விமானத்தை இந்திய விமானப்படை தளபதி பிஎஸ் தனோவாவுடன் மீண்டும் இயக்கினார்.
abhinandhan, IAF chief
இந்நிலையில், பாகிஸ்தான் சிறை பிடித்ததற்குப் பிறகு போர் விமானம் மிக் 21ஐ இன்று அபிநந்தன் இயக்கியுள்ளார். அபிநந்தனுடன் இந்திய விமானப்படை தளபதி பிஎஸ் தனோவாவும் உடனிருந்தார், இருவரும் இணைந்து மிக் 21 ரக போர் விமானத்தை இயக்கினர்.