தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 5, 2019, 10:40 AM IST

ETV Bharat / bharat

''மெட்ரோ திட்டத்திற்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு''

மும்பை; மெட்ரோ ரயில் பணிக்காக மும்பை ஆரே பகுதியில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

TREE(file image)

மெட்ரோ கார் ஷெட் பணிக்காக வடக்கு மும்பையில் உள்ள ஆரே பகுதியில் இருந்த 200 மரங்களை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை இரவு வெட்டினர். இந்த காணொலி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதற்கு முன்னதாக 2,600 மரங்கள் வெட்ட மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுப்பட்ட மக்கள்

இதையடுத்து நேற்று மெட்ரோ அலுவலர்கள் 200 மரங்களை வெட்டினர். மேலும் மரங்களை வெட்ட முயன்றதால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். மேலும் போராட்டம் தொடராமல் இருக்க அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ''மகாராஷ்டிரா முதலமைச்சரின் சொத்து மதிப்பு ரூ.3கோடி''

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details