தமிழ்நாடு

tamil nadu

மரங்களை வெட்டியதற்கு ஆதித்யா தாக்கரே கண்டனம்!

மும்பை: மெட்ரோ கார் ஷெட் பணிக்காக 200 மரங்கள் வெட்டப்பட்டதற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By

Published : Oct 5, 2019, 1:00 PM IST

Published : Oct 5, 2019, 1:00 PM IST

Aaditya Thackeray

மும்பை வடக்கு பகுதி ஆரே மெட்ரோ கார் ஷெட் பணிக்காக 200 மரங்கள் வெட்டப்பட்டதற்கு பொதுமக்கள் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மெட்ரோ அலுவலர்களின் இந்த செயலுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மரங்களை வெட்டுவது வெட்கக்கேடான செயல் என்றும், மரங்களை அழிப்பதற்கு பதிலாக பயங்கரவாத முகாம்களை அழிக்க மும்பை மெட்ரோ அலுவலர்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அனுப்புங்கள் எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும், ஆரே பகுதியில் தர்ணாவில் ஈடுப்பட்டவர்களின் கோரிக்கைகளை கேட்காமல் குற்றவாளிகளைப் போல நடத்தியற்கும் ஆதித்யா தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ''மெட்ரோ திட்டத்திற்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு''

ABOUT THE AUTHOR

...view details