பிகார் மாநிலத்தில் கடந்த ஓராண்டாக அதிக அளவிலான குழந்தைகள் மூளைக் காய்ச்சல் (அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்) நோய்க்கு பதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நோயின் காரணமாக உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலைத் தடுக்க மாநில அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பிகாரை மீண்டும் அச்சுறுத்திய மர்ம நோய் - 9 குழந்தைகள் பலி
பாட்னா: பிகாரில் கடுமையான மூளைக் காய்ச்சல் காரணமாக ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 குழந்தைகளில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிகார் மாநிலத்தில் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடுமையான என்செபாலிடிஸ் நோய்க்குறி காரணமாக 70 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஒன்பது குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது வரை 56 குழந்தைகள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்த மர்ம நோயின் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் பிகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் 140 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.