தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 24, 2020, 5:03 PM IST

Updated : Jun 24, 2020, 5:52 PM IST

ETV Bharat / bharat

கருவேப்பிலையின் 5 முக்கிய மருத்துவப் பயன்கள்

கருவேப்பிலையின் ஐந்து முக்கிய மருத்துவப் பயன்களை ஆயுர்வேத மருத்துவர் கல்பேஷ் விவரிக்கிறார்.

Curry
Curry

நாம் அன்றாடம் உணவில் வாசனை மற்றும் தனித்துவ ருசிக்காகச் சேர்த்துக்கொள்ளும் கருவேப்பிலை பல மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது. கருவேப்பிலையின் ஐந்து முக்கியப் பயன்களை ஆயுர்வேத மருத்துவர் கல்பேஷ் பாபன்னா பகிர்ந்துள்ளார். அவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

  • வயிற்றுக்கோளாறு உள்ளவர்களுக்கு கருவேப்பிலை நல்ல மருந்தாகும். வெறும் வயிற்றில் கருவேப்பிலையை பச்சையாகவோ அல்லது தயிருடன் கலந்தோ உண்டால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
  • பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது கருவேப்பிலை. வயிற்றில் ஏற்படும் பாக்டீரியாத் தொற்றை கருவேப்பிலை குணப்படுத்தும்.
  • நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கருவேப்பிலை சிறந்த மருந்தாகும். உடலின் குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் கருவேப்பிலை பெரும்பங்காற்றுகிறது.
  • கண்கள், பார்வை தொடர்பான குறைபாடுகளைச் சீர்செய்ய கருவேப்பிலை உதவும். கருவேப்பிலையை முறையாக உட்கொண்டால் கண்புரை போன்ற சிக்கல்களுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.
  • முடிஉதிரும் சிக்கலைப் போக்க கருவேப்பிலை மகத்துவமான பங்களிப்பைத் தருகிறது. மேலும், கருவேப்பிலை தொடர்ச்சியாக உட்கொண்டால் முடி வளர்ச்சி பெரும் வாய்ப்புகளும் உண்டு.
Last Updated : Jun 24, 2020, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details