தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆம்பன் நிவாரணப் பணியில் ஈடுபட்ட 49 தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினருக்கு கரோனா!

புபனேஸ்வர்: ஆம்பன் புயல் நிவாரணப் பணிக்காக ஒடிசாவிலிருந்து மேற்கு வங்கம் சென்ற தேசியப் பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 49 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

By

Published : Jun 9, 2020, 4:24 PM IST

NDRF men test positive
NDRF men test positive

ஆம்பன் புயல் தாக்கத்தைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளுக்காக ஒடிசாவிலிருந்து தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர். இப்பணியில் ஈடுபட்டிருந்த 49 பேருக்கு தற்போது கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.

முன்னதாக, கொல்கத்தாவில் நிவாரணப் பணிக்குச் சென்று ஒடிசா மாநிலம் கட்டாக் திரும்பிய தேசியப் பேரிடர் மீட்புக் குழவின் மூன்றாவது பட்டாலியனைச் சேர்ந்த 173 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது. நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பின் தீவிரம் கருதி ஒடிசாவில் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அஜித் பண்டிட் - தலைவர்கள் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details