இந்தியாவில் சுழற்சி முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த மாதம் காலியாக இருந்த 61 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் வெற்றிபெற்ற முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட 45 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவி ஏற்கவுள்ளனர். மேலும், தமிழ்நாட்டிலிருந்து திமுகவைச் சேர்ந்த என்.ஆர். இளங்கோ, பி செல்வராஜ், திருச்சி சிவா ஆகியோரும், அதிமுகவைச் சேர்ந்த கேபி முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகியோரும் பதவியேற்கின்றனர். இவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.