ஜம்மு-காஷ்மீரின் பாட்கம் மாவட்டத்தின் பெத்கூட் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் காஷ்மீர் காவல் துறையினர் பெத்கூட் கிராமத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் வேட்டையில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், "பெத்கூட் கிராமத்தில் கைது செய்யப்பட்ட நான்கு லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் பெத்கூட் கிராமத்தைச் சேர்ந்த ஷாகில் அஹ்மத் வாணி, ஷோகத் அஹ்மத் என்றும், மற்ற இருவர் செர்வானி க்ரார்-இ-ஷரீஃப்பைச் சேர்ந்த அகிப் மக்பூல் கான் மற்றும் அஜாஸ் அகமது தார் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மற்ற லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் மற்றும் ஆயுதங்களை வழங்கியுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரஷ்ய பயணத்தில் சீன அமைச்சரை சந்திக்கிறாரா ராஜ்நாத் சிங்?