கடந்த ஜூலை 2ஆம் தேதி, ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று கொல்கத்தாவில் தரையிறங்கும்போது தவறுதலாக ஓடுபாதையில் உள்ள மின்விளக்குகள் மீது மோதியுள்ளது. இதனால் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற கேப்டன் சவுரப் குவாலியா, ஆராதி குணசேகரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதுகுறித்து அவர்கள் அளித்த பதில்கள் ஏற்புடையதாக இல்லை எனக்கூறி இரண்டு பேரையும் ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து விமான போக்குவரத்துத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
விதிகளை மீறிய 4 பைலட்கள் சஸ்பெண்ட்!
டெல்லி: பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக நான்கு விமான ஓட்டிகள் உட்பட ஐவரை இடைநீக்கம் செய்து விமான போக்குவரத்துத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
airplane
இதேபோன்று, கடந்த மாதம் 17ஆம் தேதி, பெங்களூருவிலிருந்து கொல்கத்தாவுக்குப் புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில், விமான கேப்டன் மிலிந்த், விமானக் குழுவைச் சேர்ந்த ரஜாட் ஆகியோர் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திலும் அவர்கள் அளித்த பதில் ஏற்புடையதாக இல்லை. அதனால், இவர்களை ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.