கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடி, நாடு முழுவதும் பூட்டுதலை அமல்படுத்த உத்தரவிட்டார்.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
போக்குவரத்தும் முடக்கப்பட்டு இருப்பதால் வெளிமாநிலத்தில் தங்கி வேலை புரிபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்து சிறப்பு ரயில்கள் மூலம் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
மேலும் லட்சக்கணக்கான பேர் வெளிமாநிலங்களில் சிக்கி தவிப்பதால், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஜூன் 1ஆம் தேதி முதல் நாள்தோறும் 200 குளிர்சாதன வசதி அல்லாத ரயில்கள் இயங்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இந்த 200 ரயில்கள் இய்யாக்கப்பட உள்ள நிலையில் ஏற்கனவே இயங்கிக்கொண்டு இருக்கும் 200 சிறப்பு ரயில்களையும் சேர்த்து மொத்தம் 400 ரயில்கள் இயங்கும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இணையதளம் மூலம் மட்டுமே இந்த ரயிலில் பயணிப்பதற்கான பயணசீட்டை பதிவுசெய்ய முடியும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மேலும் 19 நாட்களில் 21.5 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலார்களை இந்தியன் ரயில்வே அவர்களது சொந்த மாநில;ஙகளுக்கு அனுப்பிள்ளது எனவும் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘புலம்பெயர்ந்தோரின் விவகாரத்தில் அரசியல் வேண்டாம்’ - பிரியங்கா காந்
தி