தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தூர் மத்திய சிறையில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு!

போபால்: இந்தூர் மத்திய சிறையில் இன்று 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மத்திய சிறையில் கரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

Indore Central Jail  COVID-19  Jail inmates  இந்தூர் சிறைச் சாலை  மத்திய சிறைச்சாலை  இந்தூர் மத்திய சிறை  சிறையில் கரோனா  inmates of Indore central jail test positive for COVID-19  Indore central jail
இந்தூர் மத்திய சிறையில் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்வு

By

Published : Apr 28, 2020, 6:41 PM IST

மத்தியப் பிரதேசத்தின் மத்தியச் சிறைச்சாலையில் ஆறு கைதிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அங்கிருந்த 250 கைதிகள் தற்காலிக சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இந்தச்சூழ்நிலையில், தற்காலிக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இந்தூரின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கைதிகள், இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். தற்போது, மத்தியப் பிரதேச மத்திய சிறைச் சாலை கைதிகளில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:நிதி ஆயோக் அலுவலருக்கு கரோனா வைரஸ் ...!

ABOUT THE AUTHOR

...view details