இதுதொடர்பாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் நாள்தோறும் குறைந்தது பன்றிக் காய்ச்சலால் பாதிப்படைந்த எட்டு நோயாளிகள் அனுமதிக்கப்படுவதும், இந்த காய்ச்சலால் இதுவரை எந்த இறப்பும் பதிவாகவில்லை என்பதும் அறிய முடிகிறது.
மேலும் இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் தேஷ் தீபக் கூறுகையில், "பன்றிக் காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளில் இருமல், சளி, தொண்டையில் எரிச்சல், தசை வலி, சோர்வு ஆகியவை அடங்கும். நீடித்த காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும். சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அதனை புறக்கணிக்கக்கூடாது" என்று தெரிவித்தார்.