பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாவது கட்டம் டெல்லியில் உள்ள காஷ்மீரி கேட்டில் இருந்து இன்று (ஜன.3) தொடங்குகிறது. இந்த யாத்திரை உத்தரபிரதேசத்திற்குள் நுழைகிறது.
ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரையிலான 3,122 கி.மீ பயணம் முடிவடைந்தது. இந்நிலையில் குளிர்கால இடைவேளைக்குப் பிறகு பாரத் ஜோடோ யாத்திரை இன்று மீண்டும் தொடங்குகிறது.
இன்று முதல் வரும் 5ஆம் தேதி வரை உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்கிறார்.
ஜனவரி 6 முதல் ஜனவரி 10 ஆம் தேதி வரை ஹரியானாவிலும், ஜனவரி 11 முதல் 20 ஆம் தேதி வரை பஞ்சாப் மற்றும் ஹிமாச்சலிலும், ஜனவரி 20 முதல் 30 ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீரிலும் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு: இன்று முதல் டோக்கன் விநியோகம்