தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாரத் பந்த்: மெட்ரோ ரயில் நிலையம் மூடல்

பாதுகாப்பு சூழலை கருத்திற்கொண்டு, டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் பண்டிட் ஸ்ரீராம் சர்மா மெட்ரோ நிலையத்தை மூடியுள்ளது.

பாரத் பந்த்
பாரத் பந்த்

By

Published : Sep 27, 2021, 7:14 PM IST

டெல்லி: நாடு தழுவிய முழு அடைப்பையொட்டி, டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களை மூட ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா மெட்ரோ நிலையம் ஹரியானாவின் திக்ரி எல்லைக்கு அருகிலுள்ளது. அங்கு விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருப்பதால், இது முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.

பாரத் பந்த்

இதற்கிடையில், விவசாயிகள் காலை முதல் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக, ரயில் தண்டவாளங்களில் முகாமிட்டிருப்பதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தகவலின்படி, டெல்லியில் இருந்து கட்ரா செல்லும் 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' பானிபட் நிலையத்தை தாண்டி செல்ல முடியாமல் அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் செல்லும் இரண்டு சதாப்தி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து மோகா, பழைய டெல்லியில் இருந்து பதான்கோட் செல்லும் இரண்டு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சில ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன என்றும், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் வடக்கு ரயில்வேயின் அலுவலர் தெரிவித்துள்ளார்.

பாரத் பந்த்

ஆந்திராவின் திருப்பதியில் காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தொழிற்சங்கத்தினர் ரயில் பாதையை மறித்தனர். இதற்கிடையே, ஹரியானாவில் உள்ள பகதூர்கர் ரயில் நிலையத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details