தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் பாதிப்பு: விமான ஊழியர்களுக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தல்

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விமான ஊழியர்கள் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், பத்து நாட்களுக்கு தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

ந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம்
ந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம்

By

Published : Dec 20, 2020, 7:30 PM IST

டெல்லி:கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விமானிகள் உள்ளிட்ட விமான ஊழியர்கள் தொற்று அறிகுறிகள் இல்லாவிட்டாலும் தங்களை வீட்டிலேயே பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பத்து நாட்களுக்கு பிறகு உடல்நிலையில், எந்த பாதிப்பும் இல்லை என்றால் அவர்கள் மீண்டும் பணியில் ஈடுபடலாம் என மருத்துவ கண்காணிப்பாளர் அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ”லேசான அறிகுறி இருப்பவர்கள் பத்து நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட பின்பு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இல்லை என்றால் மீண்டும் பறக்க அனுமதிக்கப்படுவார்கள். தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பின்பு மீண்டும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 14 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்துதலில் இருப்பவர்கள், மீண்டும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பறக்க அனுமதிக்கப்படுவார்கள்.

கரோனாவின் மோசமான அறிகுறி இருப்பவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்பு, தான் குணமடைந்ததாக இந்திய விமான படை மருத்துவ மையத்திலிருந்து சான்றிதழ் பெற்ற பின்பு பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்ளுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயமாக 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் " என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:டெல்லி - பெங்களூரு: விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்...!

ABOUT THE AUTHOR

...view details